Tuesday, December 2, 2014

அவள்...


அவள் எல்லாவற்றிலும்  நடுநிலை...

 
அவள் வெளுத்த வெள்ளையுமில்லை ...
அடர்ந்த மாநிறமுமில்லை .. 

அவள் அடிக்கும் அழகுமில்லை ..
மறக்கும் முகமும் இல்லை..


அவள் அதிகம் பேசுவதுமில்லை 

அவள் கண்கள் அமைதி காப்பதுமில்லை...
அவள் இதயத்தை மொழிபெயர்த்த வண்ணம்.. எப்போதும்..

அவள் என்னை ஏற்பது என்ன...
அங்கீகரிக்கக் கூட இல்லை...!
ஆனால்..
அவள் என்னையன்றி முழுமை பெறவுமில்லை..!